[X] Close

கிணறு வெட்டும் தொழில் செய்யும் இரண்டு பெண்கள் கல்குவாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு

தமிழ்நாடு

Two-women-drowning-in-a-quarry-have-drowned

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சிக்காடு கிராமத்தில் கிணறு வெட்டும் பெண் தொழிலாளிகள் இருவர் அருகில் உள்ள கல்குவாரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி  உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் செல்வி, அதே பகுதிக்கு அருகில் உள்ள பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (17), மேகலா (30) இவர்கள் மூவரும் சிக்காடு கிராமத்தில் கிணறு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

image


Advertisement

இந்நிலையில் இன்று அதே கிராமத்தில் உள்ள கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும்போது கல்குவாரி பள்ளத்தில் இருந்த தண்ணீரில் துணிகள் மூழ்கியுள்ளது.

இதைத் தொடந்து அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட செல்வி, ஷாலினி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேகலா ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close