[X] Close

மத்திய அமைச்சரின்  கார் மீது தாக்குதல்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

இந்தியா

Union-Minister-s-car-attacked-in-West-Bengal

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளிதரனின்  கார் மீது கற்கள் வீசியும், கட்டைகளாலும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மேற்கு மிட்னாப்பூர் பகுதியில் மத்திய அமைச்சர் முரளிதரன் சென்ற கார் மீது கற்களாலும், கட்டைகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் அப்பகுதியில் கலவரசூழல் உருவாகியிருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்டது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஓட்டுநர் உட்பட பலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். 

மே 2 ஆம் தேதி மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வெளியானது, இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பின்னர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது, இந்த வன்முறையில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளதாகவும், பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வன்முறைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசிடம் விளக்கம் கேட்டதுடன். உண்மை அறியும் குழுவையும் மாநிலத்திற்கு அனுப்பியிருக்கிறது.


Advertisement

மேற்கு வங்க வன்முறைக்கு எதிராக பாஜகவினர் நேற்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்திய சூழலில், இன்று அமைச்சரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

 


Advertisement

Advertisement
[X] Close