Published : 05,May 2021 09:16 PM
ராஜஸ்தான்: கொரோனா பாதிப்பால் தந்தை மரணம் - தகனத்தின் போது நெருப்பில் விழுந்த மகள்

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தந்தையின் இறுதிச்சடங்கில் தகனத்தின்போது மகளும் நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற துயரச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தா மாநிலம் பார்மர் மாவட்டத்தில், 74 வயதான தாமோதர்தாஸ் ஷர்தா என்ற நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார்.
அவருடைய உடல், தகனம் செய்யப்பட்டபோது ஷர்தாவின் மூன்றாவது மகளான சந்திரா ஷர்தா (34 வயது) இறுதிச்சடங்குகளுக்காக மயானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு திடீரென உடல் எரிந்துகொண்டிருந்த தீயில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சுற்றி நின்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோதும் 70% காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகிலிருந்த ஜோத்பூர் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாக பிடிஐ தகவல் வெளியிட்டுள்ளது.