[X] Close

பிரபல திரைப்படத் தொகுப்பாளர் அஜய் ஷர்மா கொரோனா தொற்றால் காலமானார்!

இந்தியா,கொரோனா வைரஸ்

Popular-Film-Editor-Ajay-Sharma-Passed-away-after-testing-positive-for-COVID19-in-New-Delhi

பிரபல திரைப்படத் தொகுப்பாளர் அஜய் ஷர்மா கொரோனா தொற்றால் காலமானார். லூடோ, ஜக்க ஜசூஸ் மாதிரியான படங்களில் தொகுப்பாளராக அவர் பணியாற்றியுள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Advertisement

பர்பி, கை போ சே, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் மாதிரியான படங்களில் இணை தொகுப்பாளராக அவர் பணியாற்றி உள்ளார். 

பத்து நாட்களுக்கு முன்னர் அவர் சுவாசிக்க ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி வேண்டுமென்ற கோரிக்கையை ட்விட்டரில் விடுத்திருந்தார் தயாரிப்பாளார் அசோக் பண்டிட். தொடர்ந்து அஜய் ஷர்மா சிகிச்சை பெற்று வந்த நிலையில், டெல்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தின் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் அவரது உயிர் செவ்வாய் அன்று நள்ளிரவு பிரிந்துள்ளது. 


Advertisement

அவரது இழப்புக்கு திரை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். நான்கு வயது மகன் மற்றும் மனைவியுடன் அவர் வாழ்ந்து வந்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close