[X] Close

ஹைதராபாத் விலங்கியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா,கொரோனா வைரஸ்

COVID19-infection-has-been-confirmed-in-8-lions-at-the-Hyderabad-Zoo-In-India

ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள வரும் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி ஆகியுள்ளது. இதை சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 


Advertisement

பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு சிங்கங்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், வழக்கம் போல உணவு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி பூங்கா மூட பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close