[X] Close

பிரதமருக்கான புதிய வீடு கட்டுவதைவிட அந்த ரூ1300 கோடியில் மக்களை காப்பீர்: பிரியங்கா காந்தி

இந்தியா,கொரோனா வைரஸ்

We-can-save-people-s-lives-with-the-money-for-the-new-house-being-built-for-the-Prime-Minister-at-a-cost-of-13000-crore-rupees-Priyanka-Gandhi

பாரத பிரதமருக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு செலவாகும் 13000 கோடி ரூபாயை மக்களின் உயிர் காக்க பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.


Advertisement

சென்ட்ரல் விஸ்டா புராஜக்ட் என்ற திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. “மக்கள் ஆக்சிஜனுக்காகவும், தடுப்பு மருந்துக்காகவும் அல்லல்பட்டு வரும் இந்த நேரத்தில் 13000 கோடி ரூபாய் செலவில் பிரதமருக்காக கட்டப்பட்டு வரும் புதிய வீட்டுக்கான தொகையை கொண்டு மக்களின் உயிரை காக்க பயன்படுத்தலாம். அது தான் சிறந்ததாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி. 

“சென்ட்ரல் விஸ்டா அவசியமில்லை. ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வை கொண்ட மத்திய அரசு தான் அவசியம்” என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த வாரம் ட்வீட் செய்திருந்தார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close