[X] Close

கோவை: கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை - 5 மணிநேரம் காத்திருந்து திரும்பிச் சென்ற மக்கள்

கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

கோவை அரசு கலைக்கல்லூரியில் தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில் காலை 6 மணி முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Advertisement

கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த கூட்டம் அதிகரித்ததால், அங்கு செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் கோவை அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இன்று காலையில் இருந்தே அரசு கலைக்கல்லூரி முன் பொதுமக்கள் குவிந்த வந்த நிலையில், 100 தடுப்பூசிகளே அங்கு கொண்டுவரப்பட்டது.

அதை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டாம் தவணை செலுத்தப்பட்டதோடு, 30 பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தடுப்பூசி இல்லை என தெரிவித்த நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த மக்கள் கலைந்து செல்லாமல் 5 மணி நேரம் காத்திருந்து பின்னர் திரும்பிச் சென்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close