Published : 04,May 2021 11:39 AM
“தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்” - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.