[X] Close

திமுக கூட்டணி வெற்றி...! தமிழக அரசியலில் அடுத்து என்ன?

தமிழ்நாடு,சுடச்சுட

what-next-of-victory-candidate-of-tamilnadu-election

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து புதிய முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்று பார்க்கலாம்.


Advertisement

*234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதற்கான சான்றிதழ்களை பெறுவர்

* அதிமுக, திமுக உள்ளிட்ட வெற்றி பெற்ற கட்சிகள் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்தும்


Advertisement

* அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்

* திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுபவர் முதல்வராக பதவியேற்பார்

* தோல்வியை ஏற்று தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார்


Advertisement

* புதிய அரசு பதவியேற்கும் வரை காபந்து முதல்வராக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்துவார்

* இதற்கிடையில் பெரும்பான்மை கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோருவார்

* உரிமை கோரிய மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் அழைப்பு விடுப்பார்

* அழைப்பின் பேரில் ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின் தன் தலைமையில் பதவியேற்க போகும் அமைச்சரைவை பட்டியலையும் ஆளுநரிடம் வழங்குவார்.

ஆளுநருடன் சந்திப்பின்போதே பதவியேற்கும் நேரம், நாள் இடம் அப்போதே உறுதி செய்யப்படும்

* முதலமைச்சராக மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்

* முந்தைய அரசு கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பும், புதிய அரசு அமைக்கப்பட்டதற்கான அறிவிப்பும் பொதுத்துறை சார்பில் வெளியாகும்

* தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு அவர் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பார்

* தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்


Advertisement

Advertisement
[X] Close