[X] Close

புரட்சியாளர்கள் சாவைக் கண்டு பயப்படுவதில்லை: கமல் புது ட்வீட்

Kamal-New-Tweets-revolutionaries-are-not-afraid-of-death

புரட்சியாளர்கள் சாவைக் கண்டோ தோல்வியைக் கண்டோ பயப்படுவதில்லை என கமல் புது ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.


Advertisement

கமல் தனது அரசியல் கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். ஊழலை எதிர்த்து அவர் பேசி வருவதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களும்  பாஜகவினரும் கமலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஊழல் விவகாரத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே எதிர்த்துப் பேசி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.


Advertisement

இந்நிலையில் கமல் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவில், 'என் பிரகடனத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்' என்று தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு ட்வீட்டில் "நான் ஊழலுக்கு எதிராக இருக்கிறேன். ஊழலுக்கு எதிரான அனைவரையும் எதிர்க்கிறேன். புரட்சியாளர்கள் சாவைக் கண்டோ தோல்வியைக் கண்டோ பயப்படுவதில்லை. நீங்கள்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close