[X] Close

“பேரனுக்கு கொரோனாவை பரப்பிவிட்டால்..” பயத்தில் தற்கொலை செய்துகொண்ட தாத்தா - பாட்டி!

இந்தியா

Elderly-couple-suicide-over-fear-of-spreading-coronavirus-to-grandson

ராஜஸ்தானில் பேரனுக்கு கொரோனாவை பரப்பிவிடுவோமோ என்ற அச்சத்தில், கொரோனா பாதித்த வயதான தம்பதிகள் ரயில்முன் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியை சேர்ந்த ஹீரலால் பைர்வா (75) மற்றும் அவரது மனைவி சாந்திபாய் (70) ஆகியோர் தங்கள் 18 வயது பேரன் மற்றும் மருமகளுடன் நகரின் புரோஹித்ஜி கி தப்ரி பகுதியில் வசித்து வந்தனர். வயதான இந்த தம்பதியரின் மகன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஹீரலால் பைர்வா - சாந்திபாய் தம்பதிக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தனர். இந்த நிலையில் தங்களால் பேரன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சம்பல் ஓவர் பிரிட்ஜ் அருகே, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்திய ரயில்வே போலீசார், COVID-19 நெறிமுறைகளின்படி உடல்களை இறுதி சடங்குகள் செய்ய அனுப்பி வைத்தனர்.


Advertisement

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


Advertisement

Advertisement
[X] Close