Published : 02,May 2021 04:26 PM

ட்விட்டரில் டிரெண்டிங் ஆகும் ’முகஸ்டாலின்எனும்நான்’ ஹேஷ்டேக்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கவுள்ளதையொட்டி #முகஸ்டாலின்எனும்நான்” என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 153 இடங்களிலும், அதிமுக கூட்டணி 80 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும், முன்னிலை பெற்று வருகிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கவுள்ள நிலையில் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ”#முகஸ்டாலின்எனும்நான்” என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்