[X] Close

மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ சேவை வழங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்!

இந்தியா

Mumbai-teacher-drives-auto-rickshaw-to-ferry-COVID-19-patients-for-free

மும்பை தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக ஆட்டோ போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறார்.


Advertisement

மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் தத்தாத்ரய சாவந்த் என்ற ஆங்கில ஆசிரியர் சானிடைசர், பிபிஇ கிட் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆட்டோ வாகன சேவையை வழங்கி வருகிறார். வடக்கு மும்பைப் பகுதியில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக  அங்குள்ள மக்களுக்கு அவர் இந்தச் சேவையை வழங்கி வருகிறார்.

இது குறித்து அவர் கூறும் போது, “ வீடுகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு செல்ல விரும்பும் கொரோனா நோயாளிகளுக்கும், மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்கு திரும்ப விரும்பும் நோயாளிகளுக்கு இந்தச் சேவையை வழங்குகிறேன். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பாதுகாப்பாக பின்பற்றி இந்தச்சேவையை செய்கிறேன்.


Advertisement

image

இந்தத்தருணத்தில், கொரோனாத்தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சரியான தருணங்களில் சிகிச்சை கிடைக்காததால் நிறைய நபர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்குமா இல்லையா.. தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் சேவை அதிக விலையுடையதாக இருக்கிறது. பொது போக்குவரத்து வாகனங்களிலும் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகையால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்தச்சேவையை நான் வழங்கி வருகிறேன்.

image


Advertisement

தற்போது வரை 26 கொரோனா நோயாளிகளுக்கு உதவிய தத்தாத்ரய சாவந்த்க்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும், உதவிகளும் குவிந்து வருகின்றன. கார்ப்ரேட் விவகாரத்துறையும் ஆட்டோவிற்கு தேவையான மொத்த எரிபொருளை தர முன்வந்துள்ளது.

புகைப்பட உதவி: ஏ.என்.ஐ 


Advertisement

Advertisement
[X] Close