கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக டிப்ளமோ இன்ஜினியர் போக்சோவில் கைது

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக டிப்ளமோ இன்ஜினியர் போக்சோவில் கைது
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக டிப்ளமோ இன்ஜினியர் போக்சோவில் கைது

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக டிப்ளமோ இன்ஜினியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (21). டிப்ளமோ இன்ஜினியரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய நர்சிங் டிப்ளமோ படித்துவரும் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை அடுத்து தலைமறைவாக இருந்த கலியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com