[X] Close

‘மோடி முதல் ராகுல் வரை’ - தமிழகத்தை குறிவைத்து பரப்புரை செய்த முக்கிய தலைவர்கள்!

தமிழ்நாடு

Modi-to-Rahul-national-party-leaders-targeted-TN-in-election-campaign

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் பரப்புரைகளில் வட இந்தியத்தலைவர்களின் வருகை இருந்தது. குறிப்பாக, பிரதமர் மோடி உட்பட பாரதிய ஜனதா தலைவர்கள் அதிக அளவு தமிழகத்தை குறிவைத்து பரப்புரை செய்தனர்.


Advertisement

கடந்தத் தேர்தல்களை விட அதிக பரப்புரைப் பயணங்கள் இந்த சட்டசபைத் தேர்தலில் கவனிக்கக்கூடிய அம்சமாக இருந்தது வடஇந்தியத் தலைவர்களின் தமிழக வருகை. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முக்கிய முகங்கள் இல்லாத நிலையில், திமுக, அதிமுக தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர் எனில், கடந்த காலங்களைப்போல இல்லாமல் இந்தத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தமிழக பரப்புரைக்களம் கண்டனர்.

image


Advertisement

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக சென்னை மற்றும் கோவைக்கு பிரதமர் மோடி வந்தநிலையில், தேதி அறிவிப்புக்குப்பிறகு தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகனுக்கு ஆதரவாகவும், கன்னியாகுமரி மற்றும் மதுரையிலும் பிரதமர் நரேந்திரமோடி பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்றார். அரவக்குறிச்சி, சென்னை, நாகர்கோவில், சுசிந்திரத்தில் அமித்ஷா சாலைப் பரப்புரைகளில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். கோவையில் யோகி ஆதித்யநாத்தும், ஸ்மிருதி இரானியும் வாக்கு சேகரித்தனர். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூத்தத்தலைவர்கள் இந்த முறை அதிக கவனம் எடுத்துக்கொண்டிருப்பதை இந்த வருகைகள் உறுதி செய்கின்றன.

அதேபோல காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலுக்கு முன்பாக கோவையில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரைகளுக்கு தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்பாக, கன்னியாகுமரியில் ராகுல்காந்தி செய்த சாலைபரப்புரை கவனம் ஈர்த்ததாக அமைந்தது. அதேபோல, சேலம் சீலநாயக்கன்பட்டியில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்தலைவர்களுடன் சேர்ந்து ராகுல்காந்தி பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

image


Advertisement

பிரியங்கா காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவதாக இருந்தநிலையில், கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்திக் கொள்ள நேரிட்டதால் அவரது வருகை ரத்தானது. நாட்டின் பிரதான கட்சிகளின் முக்கியத்தலைவர்களின் வருகை, இந்தத் தேர்தலுக்கு புது வண்ணம் கொடுத்தது என்றால் அது மிகையல்ல

-பார்வதிபாமா


Advertisement

Advertisement
[X] Close