Published : 01,May 2021 10:15 AM
பேரிடர் நிதி மாநில அரசுகளுக்கு ரூ.8,873 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

மத்திய அரசு பேரிடர் நிதியாக மாநில அரசுகளுக்கு 8,873 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது, இதில் கொரோனா சிகிச்சைக்கு 4,436.8 கோடியை பயன்படுத்த மாநில அரசுக்களுக்கு அனுமதியளித்துள்ளது.
மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதியாக 8, 873 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறது மத்திய அரசு. இதில் 50 சதவீத தொகையான 4,436.8 கோடி ரூபாயை மாநில அரசுகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதியை கொரோனா தடுப்புக்காக முன்கூட்டியே ஒதுக்கீடு செய்திருக்கிறது மத்திய அரசு. இதில் தமிழகத்துக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.