[X] Close

கே.எல்.ராகுல் 91 ரன் விளாசல்! பெங்களூர் வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு

ஐபிஎல் திருவிழா

Royal-Challengers-Bangalore-required-180-runs-to-win-the-league-match-number-26-of-the-IPL-2021-against-Punjab-Kings

கே.எல்.ராகுல் விளாசல்! பெங்களூர் வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு


Advertisement

குஜராத் மாநிலம் அகமதாபாத் - நரேந்தி மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 26வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச தீர்மானிக்க, முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. 

அந்த அணிக்காக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நான்காவது ஓவரில் ஜெமீசன் வேகத்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார் பிரப்ஷிம்ரன். தொடர்ந்து வந்த கெயில் கேப்டன் ராகுலுடன் வலுவான கூட்டணி அமைத்தார். 


Advertisement

இருவரும் 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதில் கெயில் அடித்து ஆட, ராகுல் அடக்கி வாசித்தார். 24 பந்துகளில் 46 ரன்களை குவித்து டேன் சாம்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார். அவரது ஆட்டத்தில் 6 பவுண்டரியும், 2 சிக்ஸர்களும் அடங்கும். 


Advertisement

இருப்பினும் 11 முதல் 15வது ஓவர் வரை வெறும் 29 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப். கெயில், பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான் ஆகிய பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி இருந்தனர். 

இருப்பினும் ராகுல் இறுதி வரை விளையாடி 57 பந்துகளில் 91 ரன்களை குவித்து நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் தவானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு ஹர்ப்ரீத் 17 பந்துகலைல 25 ரன்களை எடுத்து ராகுலுக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இருவரும் 32 பந்துகளில் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

பெங்களூர் அணி வெற்றி பெற 180 ரன்களை விரட்ட வேண்டி உள்ளது. பெங்களூர் அணிக்கு எதிராக கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆர்சிபிக்கு எதிரான அவர் கடைசியாக விளையாக மூன்று ஆட்டங்களில் 284 ரன்கள் குவித்துள்ளார். மூன்றுமுறையும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close