[X] Close

கொரோனா பேரிடரும் இந்திய அரசின் செயல்பாடுகளும்... - சர்வதேச ஊடகங்களின் பார்வை

இந்தியா,சிறப்புக் களம்,கொரோனா வைரஸ்

Modi-leads-India-into-viral-apocalypse--Says-Western-News-Channels

கொரோனா இரண்டாவது அலையில் அதிதீவிரத்தால் இந்தியாவுக்கே மூச்சு முட்டும் அளவுக்கு தலைநகர் டெல்லி எரிந்துக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை, மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை, மாற்று மருந்துகள் தட்டுப்பாடு என எக்கச்சக்க குளறுபடிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.


Advertisement

இதுமட்டுமா..? அவசர சிகிச்சைக்கு காத்திருப்பவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில்லை; சிகிச்சைக்கு காத்திருக்கும்போது ஆக்சிஜன் கிடைப்பதில்லை; இது எல்லாம் கிடைக்காமல் இறந்துப் போகும் ஒரு நபருக்கு, மயானத்தில்கூட இடமில்லை. அப்படியே மயானத்தில் இடமிருந்தாலும், அங்கே எரிக்க விறகுகள் இல்லை.

image


Advertisement

ஒருநாள் கொரோனா பாதிப்பு, கொஞ்சமும் கீழ் இறங்காமல், 3.5 லட்சத்துக்கும் மேலாகவே தினமும் பதிவாகி வருகிறது. உயிரிழப்பு 3,500 என்ற எண்ணிக்கை நோக்கி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை கொரோனாவால் இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை நாம் இழந்தும்விட்டோம். இறப்பு விகிதம், நாளுக்கு நாள் அதிகரிப்பதை பார்க்கும்போது, வரும் நாள்களில் இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்குமென தெரிகிறது. அவற்றை நினைத்தாலேவும், பயம் கண்முன் வந்துவிடுகிறது. இந்தளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டதன் பின்னணி என்ன? இந்தளவுக்கு கொரோனா அதிவேகமாக பரவியது, எந்தச் சூழலில்? இதன் பின்னணியில் யாரின் அரசியல் அலட்சியம் இருக்கின்றது? - சர்வதேச ஊடகங்கள் இதுகுறித்து விரிவாக பேசியுள்ளன. முக்கியமான சில ஊடகங்கள் கூறும் தகவல்கள் இங்கே உங்கள் பார்வைக்கு... 

பிரிட்டனைச் சேர்ந்த செய்தி ஊடகமான ‘தி டைம்ஸ்’, கொரோனா இந்தளவுக்கு அதிகரிக்க காரணமாக குறிப்பிடுவது, இந்திய பிரதமர் மோடியை. 'மோடி, இந்தியாவை பொதுமுடக்க தளர்வுகளிலிருந்து விடுவித்து, வைரஸுக்கு இரையாக்கிவிட்டார்' என பகிரமங்கமாக சொன்னது.

பிரிட்டனைச் சேர்ந்த மற்றொரு சர்வதேச ஊடகமான ‘தி கார்டியன்’ பத்திரிகையில், “இந்தியாவில் இன்று கோரத் தாண்டவாமடும் கொரோனாவுக்கு முழுக்க முழுக்க பின்னணியில் இருப்பது, பிரதமர் மோடியின் கண்மூடித்தனமான நம்பிக்கைதான். டொனால்ட் ட்ரம்ப் போல, கொரோனா நேரத்தில் அலை அலையாக மக்களை கூட்டி மோடி தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார்.


Advertisement

இந்த ஏப்ரலில் மட்டும், இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அதில் மாஸ்க் இல்லாமல், மோடியேவும், ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்திருக்கிறார். இந்தியாவில் கொரோனா தடுப்பில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ, அதில் எதுவுமே செலுத்தாமல், கொரோனாவுக்கு தயாராக இல்லாமல் இருந்திருக்க, முக்கிய காரணமாக இருந்துள்ளார் மோடி. அதில் மிகக் குறிப்பானது, தடுப்பூசி தயாரிப்பின் மீதான கவனமின்மை” எனக் கூறியுள்ளது. 

image

மேலும், “கொரோனா பரவுகிறது என தெரிந்தவுடன், மாநில அரசுகளின் மீது அனைத்து பொறுப்பையும் போட்டுவிட்டார் மோடி. அதோடு தன் கடமை முடிந்ததென இருந்துவிட்டார். தன்னுடைய இந்த நிலைபாட்டை கைவிட்டுவிட்டு, கொரோனா எப்படி இவ்வளவு மக்களுக்கு பரவியதென தெரிந்துக்கொண்டு, அதில் தான் செய்த தவறு என்ன என்று ஆராய்ந்து, செய்த தவறுகளுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். தொடர்ந்து அந்த தவறுகளை சரிசெய்ய, மேற்கொண்டு என்ன மாதிரியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி அவர் நிபுணர்களிடம் கேட்டு உடனடியாக அவற்றை மேற்கொள்ள வேண்டும். அதேபோல தன்னிடம் இருந்த குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் சார்ந்த நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் பழக்கத்தை கைவிடவும் வேண்டும். நாமொரு பெருந்தொற்று நேரத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இப்போது நமக்குள் சக மனிதன் என்ற ஒற்றுமையே தேவை என்றும் அவர் புரிந்துக்கொண்டு நடக்க வேண்டும். மாறாக மோடி முன்பு போலவே இருப்பாரேயானால், வரலாறு நிச்சயம் அவரை மிக கடுமையாக விமர்சிக்கும்” என குறிப்பிட்டுள்ளது. 

அமெரிக்காவின் ‘நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிகை, “இணக்கமின்மை மற்றும் அரசாங்கத்தின் தவறான முன்முடிவுகள்தான், இந்தியாவை மோசமான பாதைக்கு அழைத்து சென்று, இந்தளவுக்கு கடுமையான பாதிப்புகளை அங்கு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தான் கடந்த சில மாதங்களாக அமலில் இருந்தது.

பொதுமுடக்கம் உண்மையாகவே அமலில் இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தும் அளவுக்கு, குளறுபடியான தளர்வுகளுக்கு மத்தியில்தான் முடக்கம் அமலில் இருந்தது. இதற்கிடையில் தேர்தல் வேறு நடைபெற்றதால், அரசியல் தலைவர்களின் கூட்டங்கள் கூட்டி, மென்மேலும் நிலைமையை மோசமாக்கிவிட்டனர்” என கூறியுள்ளது. 

இதேபோல, பிபிசி, வாஷிங்க்டர் போஸ்ட் மற்றும் டைம் இதழ் ஆகியவை இணைந்து கட்டுரை உருவாக்கியது. பிபிசி, ‘மனித பேரழிவு’ என்று கூறியது. வாஷிங்டன் போஸ்ட், “இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், சென்ற மாதம் (மார்ச் 2021) ஒரு பேட்டியில், இந்தியாவில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என கூறினார். அவர் சொல்லி, ஒரு மாதம் முடிவாகப்போகும் இந்த நிலையிலும், ஒவ்வொரு நாளும் 3 லட்சம் புதிய கொரோனா நோயாளிகள் உருவாகிவருகின்றனர்” என கூறியுள்ளது. டைம் இதழில், “இந்தியா நரகமாக இருக்கிறது. கொரோனாவை கையாள்வதில் மோடி தோற்றுவிட்டார். அந்த தோல்வி, இன்று இந்தியாவையே சோகத்துக்கு தள்ளியுள்ளது” என கூறியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close