சிவகாசி அருகே சாலைமறியலின்போது பெண் போலீசின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அருகேயுள்ள துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வேந்திராயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்ததைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அவர்களை சராமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சக்தி என்பவர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர்களைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துலுக்கப்பட்டி கிராமமக்கள், அங்குள்ள பிரதான சாலையில் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு துணை காவல் கண்காணிப்பாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சாலைமறியல் கைவிடப்பட்டது. கூட்டத்தில் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரைத் தடுத்த பெண்காவலரை கடுமையாகத் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்ததால், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இதனால் தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்திவருகிறார்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்