[X] Close

கள்ளக்குறிச்சி: ஃபேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி நகைகளை கொள்ளை அடித்த 2 பேர் கைது!

குற்றம்,தமிழ்நாடு

Police-have-arrested-two-youths-from-Palani-who-cheated-on-women-through-Facebook-across-Tamil-Nadu

தமிழகம் முழுவதும் ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றிய பழனியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஃபேஸ்புக் வாயிலாக பழகிய இருவர் தன்னை சந்தித்து நகைகளை பறித்து சென்றதாக, பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விசாரிக்க அமைக்கப்பட்ட சங்கராபுரம் தனிப்படை போலீசார், திருவண்ணாமலை திருக்கோவிலூர் பிரிவு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சொகுசு காரில் வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஃபேஸ்புக் மூலம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் ஆபாச வார்த்தைகளை கூறி பாலியல் தவறுகளை செய்து, நகைகளை கொள்ளை அடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், கௌதம் என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், சொகுசு கார், 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், விலை உயர்ந்த பைக், பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close