[X] Close

‘ஒன் மேன் ஷோ’ காட்டிய பிருத்வி ஷா! கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி!

ஐபிஎல் திருவிழா

Delhi-Capitals-defeats-Kolkata-Knight-Riders-by-7-wickets-in-the-league-match-number-25-of-the-IPL-2021-Season

அகமதாபாத் - நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 25வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி உள்ளது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சேஸ் செய்தது டெல்லி அணி. 


Advertisement


Advertisement

அந்த அணிக்காக பிருத்வி ஷா மற்றும் தவான் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்து துவம்சம் செய்தார் பிருத்வி ஷா. முதல் ஓவரில் கிடைத்த உத்வேகத்தை அப்படியே தொடர்ந்தார் பிருத்வி. அதன் பலனாக 18 பந்துகளில் அரை சதம் கடந்தார் அவர். 


Advertisement

அவருக்கு பக்கபலமாக தவான் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார். இருவரும் 132 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். கிட்டத்தட்ட டெல்லி அணியின் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில் தவான் 46 ரன்கள் எடுத்து கமமின்ஸ் வேகத்தில் LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் களத்திற்கு வந்தார். 

இறுதியில் 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது டெல்லி. பிருத்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்களை குவித்து கம்மின்ஸ் வீசிய 16வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அதே ஓவரில் பண்ட் ஆட்டத்தை விரைவாக முடிக்க விரும்பி அவுட்டானார். முடிவில் டெல்லி அணிக்கான வெற்றி ரன்களை ஸ்டாய்னிஸ் விளாசினார். 


Advertisement

Advertisement
[X] Close