[X] Close

“வார்னரின் செயல்பாடு மோசமாக உள்ளது; வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பு தரலாம்” - சேவாக்

ஐபிஎல் திருவிழா

SRH-Team-Captain-David-Warner-s-thought-process-was-very-poor-says-Former-Indian-Cricket-Player-Virender-Sehwag

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னரின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது. இந்நிலையில் இந்த விமர்சனத்தை சேவாக் முன் வைத்துள்ளார்.


Advertisement

image

“நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னரின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. அவரது அணுகுமுறை அறவே சரியில்லை. அதிரடியாக ரன் குவிக்கும் வல்லமை படைத்த அவர், சென்னை அணிக்கு எதிராக 55 பந்துகளில் 57 ரன்களை எடுத்திருந்தார். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர் விளையாட வேண்டும். அதுவும் டெல்லி மாதிரியான பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான களத்தில், வார்னர் ஆமை வேகத்தில் நிதானமாக ஆடியது தான் வீழ்ச்சிக்கு காரணம். 


Advertisement

மேலும் கேப்டனாக அவரது செயல்பாடு சரியே இல்லை. கடந்த காலங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதை தவறவிட்டுவிட்டார். எனக்கு தெரிந்து கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம்” என சேவாக் தெரிவித்துள்ளார்.

image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close