[X] Close

டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம்

chennai-iit-in-first-place-in-best-engineering-collage-list

நாட்டின் டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ரேங்கிங் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. 


நாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்டவைகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் 'இந்தியா ரேங்கிங் ரிப்போர்ட் 2017' ('India Ranking Report
2017') என்ற தலைப்பில் மேலாண்மை கல்லூரிகள், பல்கலைகழகங்கள், கல்லூரிகள், பார்மசி மற்றும் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளின் சிறந்த கல்லூரிகளின் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி கல்லூரி முதலிடத்தை பெற்றுள்ளது. 

டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியல் :


Advertisement

1 . சென்னை ஐஐடி - 87.96 புள்ளிகள்
2. மும்பை ஐஐடி - 87.87 புள்ளிகள்
3. மேற்குவங்கத்தின் காரக்பூர் ஐஐடி - 81.93 புள்ளிகள்
4. டில்லி ஐஐடி - 81.08 புள்ளிகள்
5. கான்பூர் ஐஐடி - 76.83 புள்ளிகள்
6.ரூர்க்கி ஐஐடி - 73.10 புள்ளிகள்
7. கவுகாத்தி ஐஐடி - 72.30 புள்ளிகள்
8. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் - 63.97 புள்ளிகள்
9. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் - 62.59 புள்ளிகள்
10. ஐதராபாத் ஐஐடி - 60.24 புள்ளிகள் 


Advertisement

Advertisement
[X] Close