இந்தியாவில் தங்கம் விற்பனை கணிசமாக உயர்வு!

இந்தியாவில் தங்கம் விற்பனை கணிசமாக உயர்வு!
இந்தியாவில் தங்கம் விற்பனை கணிசமாக உயர்வு!

இந்தியாவில் தங்கத்தின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.

இந்தியாவில் நடப்பாண்டில் மார்ச் மாதத்துடன் முடிந்த 3 மாதங்களில், தங்கம் 140 டன் விற்பனையாகியுள்ளதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. கடந்தாண்டில், முதல் 3 மாதங்களில் 102 டன் தங்கம் விற்பனையான நிலையில், இந்தாண்டில் அது 140 டன்னாக அதிகரித்தள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. விலை மதிப்பின்படி பார்த்தால் தங்கம் விற்பனை 37 ஆயிரத்து 580 கோடி ரூபாயில் இருந்து 58 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. கொரோனா பொது முடக்கத்திலிருந்து பொருளாதாரம் மீண்டதே தங்கம் விற்பனை அதிகரிக்க காரணம் என இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 3 மாதங்களில் உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்தில் உலகின் தங்க தேவை 815.7 டன்னாக இருந்ததாகவும் இது கடந்தாண்டின் முதல் 3 மாதங்களை விட 23% குறைவு என்றும் உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறைந்ததே அதன் ஒட்டுமொத்த தேவை குறைய காரணம் என உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com