[X] Close

இழந்த பெருமையை மீட்குமா மும்பை இந்தியன்ஸ்? - ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐபிஎல் திருவிழா

Mumbai-Indians-facing-Rajasthan-Royals-in-today-league-at-IPL

ஐபிஎல் போட்டியின் 24 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று 3.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.


Advertisement

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. எனவே, 3-ஆவது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிர முயற்சியில் ஈடுபடும். மும்பையைப் பொருத்தவரை, தொடர்ந்து இரு தோல்விகள் கண்ட நிலையில் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. மும்பை அணியின் பெரிய பிரச்னையாக மிடில் மாறியுள்ளது.

image


Advertisement

மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான சூர்யகுமார், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா பொல்லார்ட் ஆகியோர் ஜொலிக்க தவறிவிட்டனர். இவர்கள் அதிரடி காட்ட தவறியதால் மும்பை அணி நிலை இப்போது பரிதாபத்துக்குறியதாக இருக்கிறது. மும்பையின் தொடக்கம் ரோகித் சர்மா - டிகாக் கூட்டணி சிறப்பாகவே செயல்படுகிறது. பவுலிங்கை பொருத்தவரை போல்ட், பும்ரா கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களை தயக்கமின்றி திணறடிக்கிறது. இதுதவிர ராகுல் சாஹர் சுழற்பந்துவீச்சில் பலமாக இருக்கிறார்.

image

ராஜஸ்தான் அணி கடைசி ஆட்டத்தில் கண்ட வெற்றி அளிக்கும் உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், ஆன்ட்ரு டை போன்றோர் இல்லை என்பது அந்த அணிக்கு இழப்புதான். தொடக்க பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரையும், அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சனையும் பெரிதும் நம்பியிருக்கிறது ராஜஸ்தான். இதில் மனன் வோரா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் சிறப்பாக ஸ்கோர் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.


Advertisement

image

அடுத்த இடங்களில் வரும் ஷிவம் துபே, டேவிட் மில்லர், ரியான் பராக் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். மேலும் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தன் பங்குக்கு அசத்தவும் செய்கிறார். பவுலிங்கில் சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனத்கட், முஸ்டாஃபிஸூர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினாலும் ராஜஸ்தானுக்கு வெற்றி எட்டாக்கனியாகவே இருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close