[X] Close

ஹெட்மயர் - பண்ட் போராட்டம் வீண்! டெல்லியை ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது பெங்களூர்!

ஐபிஎல் திருவிழா

Royal-Challengers-Bangalore-won-the-match-against-Delhi-Capitals-by-just-1-run-in-the-League-match-number-22-of-the-IPL-2021-at-Narendra-Modi-stadium

நடப்பு ஐபிஎல் சீசனின் 22வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. அகமதாபாத் - நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டதில் பெங்களூர் அணி வெறும் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 171 ரன்களை குவித்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது டெல்லி அணி. 


Advertisement

தவான் - பிருத்வி ஷா இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். வெறும் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஜேமிசன் வீசிய மூன்றாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார் தவான். இந்த சீசனில் அதிக ரன்கள் விளாசி முதல் நிலை வீரராக இருக்கும் தவானை பவர் பிளே ஓவருக்குள் வீழ்த்தியது பெங்களூர் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி. தொடர்ந்து சிராஜ் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஸ்மித் 4 ரன்களில் அவுட்டானார். 

ஹர்ஷல் பட்டேல் வீசிய எட்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் பிருத்வி ஷா அவுட்டானார். அந்த பந்து ஆப் திசையில் அகலப்பந்தாக வீசப்பட்டடு இருந்தது. அதை வலிய சென்று அடிக்க முயன்று அவுட்டானார் பிருத்வி. அதை அடிக்காமல் விட்டிந்தால் WIDE டெலிவரியாக கூட அமைந்திருக்கும். 

பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் உடன் 45 ரன்களுக்கு கூட்டணி அமைத்தார் பண்ட். இருப்பினும் 13வது ஓவரில் குட் லெந்த் டெலிவரியாக வீசி ஸ்டாய்னிஸ் விக்கெட்டை தூக்கியிருந்தார் ஹர்ஷல். இந்த சீசனின் லீடிங் விக்கெட் டேக்கர் என நிரூபித்தார். 


Advertisement

அதனால் ஹெட்மயர் கிரீசுக்கு வந்தார். நல்ல லைனில் வீசியிருந்த பந்தை தட்டி ஆடிய அவர் லூஸ் டெலிவரியை பவுண்டரிக்கு விரட்டி இருந்தார். அதனால் 32 பந்துகளில் 55 ரன்களுக்கு பண்ட் - ஹெட்மயர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் பண்ட் நிதானமாக விளையாடினார். அவர்களது பார்ட்னர்ஷிப் டெல்லி அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. 23 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஹெட்மயர். 

டெல்லி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை சிராஜ் வீசி இருந்தார். முதல் பதில் சிங்கிள், அடுத்த பந்திலும் சிங்கிள் எடுத்தனர் பண்ட் மற்றும் ஹெட்மயர். அடுத்த பந்து டாட். நான்காவது பந்தில் இரண்டு ரன். ஐந்தாவது பந்தில் பவுண்டரி. கடைசி பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பண்ட் பவுண்டரி மட்டுமே அடித்தார். 

பண்ட் 46 பந்துகளில் அரைசதம் கடந்தார். இருப்பினும் டெல்லி அணி தோல்வியை தழுவியது. 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இந்த வெற்றியின் மூலம் கோலி தலைமையிலான பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.


Advertisement

Advertisement
[X] Close