[X] Close

ஸ்டெம்புக்கு பின்னால் நின்று ஜடேஜா விக்கெட் வீழ்த்த உதவிய தோனியின் கமெண்ட்ஸ்!

ஐபிஎல் திருவிழா

CSK-Skipper-MS-Dhoni-s-comments-that-helped-Jadeja-take-the-wicket-while-standing-behind-the-stumps-in-the-league-match-against-RCB-on-sunday-IPL-2021

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து டிப்பார்ட்மென்டிலும் பட்டையை கிளப்பி இருந்தார்.


Advertisement

இந்நிலையில் ஜடேஜா மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் என பெங்களூர் அணியின் மிகமுக்கியமான இரண்டு பேட்ஸ்மேன்களை வீழ்த்த காரணமாக அமைந்துள்ளார் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 

ஸ்டெம்புக்கு பின்னால் நின்று கொண்டு ஜடேஜா விக்கெட் வீழ்த்த தோனியின் கமெண்ட்ஸ் உதவியுள்ளது. ‘தல’ என ரசிகர்களால் செல்லாமக அழைக்கப்படும் தோனி விக்கெட் கீப்பிங்கில் மாஸ் காட்டுவார். அதிவேக ஸ்டெம்பிங், DRS ரிவ்யு என அசத்துவார். 


Advertisement

இந்த ஆட்டத்தில் ஸ்டெம்புக்கு பின்னால் இருந்த தோனி ஜடேஜா மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்த இதை சொல்லி இருந்தார். “மிடில் ஸ்டெம்பில் போட்டாலும் ஆப் சைடில் தான் ஆடுகிறார். அதனால் பந்தை லெக் ஸ்டெம்பில் வீசுங்கள் ஜடேஜா” என்றார். அதே போல் பந்தை லெக் சைடில் வீசி மேக்ஸ்வெல்லை கிளீன் போல்ட் செய்தார். 

அதே போல டிவில்லியர்ஸ் ஸ்ட்ரைக்கில் இருந்த போது “ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் போட வேண்டாம். பந்தை லெக் திசையில் இறக்கு போதும்” என சொன்னார். அதை கச்சிதமாக செய்த ஜடேஜா, டிவில்லியர்ஸையும் கிளீன் போல்ட் செய்தார். 


Advertisement

தொடந்து ஹர்ஷல் பட்டேல் ஸ்ட்ரைக்கில் இருந்த போது ‘இதற்கு நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் பாத்து செய்யுங்கள்” என சொல்லி இருந்தார். தோனி சொன்ன அனைத்தும் ஸ்டெம்ப் மைக்கில் ரெக்காரடாகி இருந்தது. தற்போது அது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement
[X] Close