[X] Close

மதுரை: விவசாயியை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக் கோரி சாலைமறியல்

தமிழ்நாடு

Madurai-Road-blockade-demanding-arrest-of-those-who-incited-a-farmer-to-commit-suicide

உசிலம்பட்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த துணை முதல்வர் ஒபிஎஸ் காரையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இராமநாதபுரத்தைச் சேர்ந்த சகாதேவன் என்ற விவசாயி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

image


Advertisement

இந்நிலையில் இறந்த சகாதேவன் அவரது ஊரைச் சேர்ந்த முத்துவீரன் என்ற பட்டியலினத்தவரிடம் இருந்து வீடு வாங்கியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் மிரட்டியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் தி.விலக்கு பகுதியில் சுமார் இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருமங்கலத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற துணை முதல்வர் ஒ.பி.எஸ்-ன் காரை கண்ட போராட்ட குழுவினர், அந்தக் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

image


Advertisement

இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் மதுரை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் நேரில் வந்து தற்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.


Advertisement

Advertisement
[X] Close