[X] Close

தருமபுரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு

Dharmapuri-A-government-school-teacher-who-sexually-harassed-a-student

பென்னாகரம் அருகே அரசு பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட அரசு பள்ளி கணித ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சிஇஓ நடவடிக்கை எடுத்துள்ளார்.


Advertisement

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, உலர் உணவு பொருட்களை வழங்க அழைப்பு விடுத்துள்ளனர். இதனை பெற கடந்த 21-ம் தேதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து உலர் உணவு பொருட்களை வாங்கி சென்றுள்ளனர். அப்போது வகுப்பறையில் தனியாக இருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, அதே பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் கோவிந்தன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

image


Advertisement

இதனையடுத்து வீட்டிற்குச் சென்ற மாணவி, தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் அடுத்த நாள் (22.04.21) காலை பள்ளிக்கு சென்று கணித ஆசிரியர் கோவிந்தனை தாக்கி அருகிலுள்ள இண்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து மாணவியின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து அரசுப்பள்ளி ஆசிரியர் கோவிந்தனை, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணித ஆசிரியர் கோவிந்தன் மீது, தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா துறை ரீதியான விசாரணை நடத்தினார். தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர் கோவிந்தனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement
[X] Close