[X] Close

நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும் தயாரிப்பாளருமான என்.எஸ் மோகன் உயிரிழப்பு

சினிமா

ArunVijay-s-father-in-law-and-producer-NS-Mohan-passes-away-today-reportedly-due-to-illness

தயாரிப்பாளரும் நடிகர் அருண் விஜய்யின் மாமனாருமான டாக்டர் என்.எஸ் மோகன் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.

அருண் விஜய் நடித்த ‘வா டீல்’, ’மாஞ்சா வேலு’, ’மலை மலை’, ’தடையறக் காக்க’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் டாக்டர் என்.எஸ் மோகன். இவரது, மகள் ஆர்த்தியைத்தான் அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இன்று டாக்டர் என்.எஸ் மோகன் உயிரிழந்தார்.

image


Advertisement

68 வயதாகும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இன்று மாலை டாக்டர் மோகனுக்கு கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close