Published : 26,Jul 2017 05:10 AM

பயங்கரவாதிகளிடமிருந்து பணம் பெற்றதாக புகார் - பிரிவினைவாத தலைவர் கைது

Kashmiri-Separatist-Shabir-Shah-Arrested

காஷ்மீரில் கலவரத்தை தூண்ட பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற்றதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் பயங்ரவாதிகளிடமிருந்து பிரிவினைவாதத் தலைவர்கள் நிதியுதவி பெற்றதாக கடந்த மே மாதம் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக  தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வீட்டுக்காவலில் இருந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர்ஷா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த 7 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்