‘இந்திய-ரஷிய உறவுக்கு அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்’ என்று ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மைய இயக்குனர் மிக்கையில் கோர்படோவ் தெரிவித்தார்.
ரஷ்ய அணு ஆற்றல் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து கிண்டி காந்தி மண்டபம் சாலையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில்
அறிவியல் திருவிழா நடத்துகிறது. இதன் தொடக்கவிழா காலை பிர்லா கோளரங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குனர் பி.அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். இதில் ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் மிக்கையில் கோர்படோவ், மும்பை அணு ஆற்றல் துறையின் விஞ்ஞானி எஸ்.கே.மல்கோத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அணு ஆற்றல் பற்றி தொடக்க அறிவினை உள்ளடக்கிய ‘அணுக்கரு அரிச்சுவடி’ என்ற தமிழ்நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் மிக்கையில்,
சோவியத் யூனியன் இருந்த காலத்திலே இந்தியாவுடன் நல்ல உறவு இருந்தது. சோவியத் யூனியன் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு உதவியது. குறிப்பாக மக்களை
பாதுகாக்க ராணுவத்துக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்களை வழங்கியது. அதன்பின்னர், ரஷ்யாவாக மாறிய பிறகும் இந்தியாவுடனான நட்பு உறவு தொடருகிறது. இந்த உறவுக்கு அணு மின்நிலையம் ஒரு அடையாளமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கூடங்குளம் அணு மின்நிலையம் இருநாட்டின் உறவுக்கான பாலமாக அமைகிறது" என்றார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்