கொரோனா பரவல் எதிரொலி: ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய வீரர்கள்!

கொரோனா பரவல் எதிரொலி: ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய வீரர்கள்!
கொரோனா பரவல் எதிரொலி: ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய வீரர்கள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை ஐபிஎல் தொடரில் இருந்து 5 வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.52 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 2,812 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் "பயோ பபுள்" பாதுகாப்பு வளையத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை மைதானத்தில் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள சூழ்நிலையில் அடுத்தக்கட்டமாக டெல்லி, அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் பெங்களூர் அணியில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆர்சிபி நிர்வாகமும் அவர்களை இந்தத் தொடரில் இருந்து விடுவித்துள்ளது. மேலும் அவர்களின் இந்த முடிவுக்கு மதிப்பு கொடுப்பதாகவும் அவர்களுக்கு துணை நிற்பதாகவும் ஆர்சிபி தெரிவித்துள்ளது.

இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருக்கும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஆண்ட்ரூ டையும் சொந்தக் காரணங்கள் என கூறி நாடு திரும்புகிறார். இதேபோல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் லயாம் லிவிங்ஸ்டோனும் தொடரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். சொந்தக் காரணங்கள் என கூறினாலும் கொரோனா பரவல் அச்சம் காரணமாகவே அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வினும் கொரோனா காரணம் சொல்லி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் "குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இக்கட்டான நிலையில், அவர்களுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார். நிலைமை சரியாகும் பட்சத்தில், மீண்டும் விளையாட வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். அஸ்வினின் முடிவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com