[X] Close

கேரளா: திருமணக் கூடமாக மாறிய கொரோனா வார்டு; வாழ்த்திய பணியாளர்கள்

இந்தியா

கொரோனா நோயாளி சிகிச்சை பெற்று வந்த வார்டு, அவரது மணவிழாவுக்காக திருமணக் கூடமாக மாறியது.


Advertisement

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சரத் மோன் என்ற இளைஞரும் அவரது தாயாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வந்தனம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரத் மோனுக்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்துவது என இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதிகாரிகளின் உரிய அனுமதியுடன், மணப்பெண் அபிராமி, கொரோனா கவச உடைகளை அணிந்தபடி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவர்களும் இதரப் பணியாளர்களும் சாட்சியாக இருக்க சரத் மோனும் அபிராமியும் மாலை மாற்றிக்கொண்டனர்.


Advertisement

Advertisement
[X] Close