நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து அதற்கான தொகை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 3 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முதல் அலையை விட 2 வது அலை மக்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் சிகிச்சை பெறும் நபர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை என்பது அத்தியாவசியமானதாக இருக்கிறது.
குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?