கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் பல்வேறு சிறு - குறு தொழில்கள் கடுமையாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, திருமண நிகழ்ச்சிகளுக்கான புதிய விதிமுறைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் போதிய ஆர்டர்கள் இன்றி ஸ்கிரீன் பிரின்டிங் தொழில் மிகவும் பாதித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில், அதாவது ஏப்ரல், மே மாதங்களில்தான் அதிக எண்ணிக்கையிலான திருமண முகூர்த்த நாட்கள் இருக்கும். இந்த மாதங்களில் கோடை விடுமுறை இருக்கும் என்பதால், தங்கள் வீட்டு திருமணக் கொண்டாட்டங்களை இந்த மாதங்களில் நடத்துவது பலரின் வழக்கமாக உள்ளது.
இதன் காரணமாக, திருமண நிகழ்ச்சிகளுக்கான சங்கிலித் தொழில்களான பத்திரிகைகள் அச்சடிப்பது, தாம்பூலப் பைகள் தயார் செய்வது, சமையல் பணிகள், மேளதாள இசைக்கலைஞர்கள், பந்தல் அமைப்பாளர்கள், ஒலி - ஒளி அமைப்பாளர்கள், திருமண மண்டப டெக்கரேஷன் தொழிலாளர்கள் என பல தொழில்களும், தொழிலாளர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருவாய் ஈட்டி வந்தனர்.
கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் தொடங்கியபோது ஏப்ரல், மே மாதங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த மாதமும் இரண்டாம் அலையின் தாக்கம் வேகமாக பரவி வருவதால் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் நடைபெறக்கூடிய திருமணங்கள், அவற்றையே நம்பியே நடைபெறும் தொழில்கள் அனைத்தும் ஊரடங்கு - கட்டுப்பாடுகள் காரணமாகவும், கொரோனா தொற்று வேகமாக பரவுவதன் காரணமாகவும் கேள்விக்குறியாகியுள்ளது.
"ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு; ஆனால், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை அதிகமான திருமணங்கள் நடைபெறும் பெருமுகூர்த்த நாளாக உள்ளன. திருமணத்திற்காக ஆயிரக்கணக்கில் அச்சடிக்கப்படும் தாம்பூலப் பைகள், பத்திரிகைகளை வெறும் 100, 150 என்ற குறைந்த எண்ணிக்கையில் பிரின்டிங் எடுத்து செல்கின்றனர். இதனால், தாம்பூலப் பைகள் அச்சடிக்கப்படும் ஸ்கிரீன் பிரின்டிங் மையங்களில் லட்ச ரூபாய்க்கும் அதிகமாக தாம்பூலப் பைகள் அச்சில் ஏறாமல் வெறும் பைகளாக தேங்கிக் கிடக்கின்றன" என்கின்றனர் ஸ்கிரீன் பிரின்டிங் உரிமையாளர்கள்.
- நெல்லை நாகராஜன்
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்