Published : 25,Jul 2017 03:08 PM

காலே தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி

Indian-team-in-reaction-to-Kale-s-defeat

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நாளை தொடங்குகிறது. இதே காலே நகரில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்க உள்ளது. 

விராத் கோலி தலைமையில் ஆடும் இந்திய அணியில் ஷிவர் தவானுடன், அபினவ் முகுந்த் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெராத் தலைமையில் களமிறங்கும் இலங்கை அணியில் கருணாரத்னே, குஷால் மென்டிஸ், அசெலா குணரத்னா போன்ற இளம் வீரர்களும், உபுல் தரங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற அனுபவ வீரர்களும் உள்ளனர். இலங்கை அணி, கேப்டன் ஹெராத்தின் பந்துவீச்சை அதிகம் நம்பியுள்ளது. க‌டந்த 2015-ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஹெராத்தின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இலங்கை வென்றது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்