[X] Close

‘49 ஆல் அவுட்’ - ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவான தினம் இன்று!

ஐபிஎல் திருவிழா

On-this-day-in-2017-RCB-team-all-out-for-49-against-KKR-in-Kolkata-and-it-became-the-lowest-score-by-a-team-in-IPL-T20-Cricket-History

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைவான ஸ்கோர் பதிவான தினம் இன்று. பெங்களூரு அணி ரசிகர்களுக்கு இன்று வரை கசப்பான நினைவாக உள்ள அந்தப் போட்டியை திரும்பிப் பார்க்கலாம்.


Advertisement

ஐபிஎல்லில் ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை எனினும், மலைக்கத்தக்க பல்வேறு சாதனைகளை வசப்படுத்திய அணி என்றால் அது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தான். 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கெய்லின் அதிரடியான 175 ரன்கள் மூலம் ஐபிஎல்லில் அதிக பட்ச ஸ்கோரான 263 ரன்கள் என்ற சாதனையை படைத்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தினத்தில் ஐபிஎல்லில் குறைவான ஸ்கோரை ஆர்சிபி பதிவு செய்யும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட பெங்களூரு, 131 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது. கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், கோலி என நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கிய பெங்களூரு, கொல்கத்தாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 49 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

image


Advertisement

கோப்பை வெல்லாத ஏக்கத்தில் இருந்த பெங்களூரு அணி ரசிகர்களுக்கு கூடுதல் ரணமாக அமைந்தது இந்த 49 ஆல் அவுட்.


Advertisement

Advertisement
[X] Close