[X] Close

மும்பை Vs பஞ்சாப்: இன்றைய ஆட்டத்தில் வெல்லப்போவது யார்?

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

MI-faces-PBKS-in-today-IPL-match-league

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Advertisement

இந்த சீசனில் இரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் மும்பை 2 வெற்றிகளும், பஞ்சாப் ஒரு வெற்றியும் பெற்றுள்ளன. இதனால் இன்றையப் போட்டியில் வெற்றிப்பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். பஞ்சாபை பொறுத்தவரை, சீசனை வெற்றியுடன் தொடங்கினாலும் பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ஜொலிக்க வேண்டியிருக்கிறது.

image


Advertisement

பேட்டிங்கை பொறுத்தவரை மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல் நான்றாக விளையாடினாலும், கிறிஸ் கெயில் மற்றும் நிகோலஸ் பூரணும் இன்னும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. அதேநேரத்தில் கடைசி கட்ட அதிரடி ஆட்டத்துக்கு தீபக் ஹூடா நம்பிக்கையளிக்கிறார். பவுலிங்கில் ஜை ரிச்சர்ட்சனும், ரைலி மெரிடித்தும் சொதப்புகின்றனர். அதேபோல சுழற்பந்துவீச்சில் முருகன் அஸ்வின் பெரியளவில் ஜொலிக்கவில்லை.

நடப்பு சாம்பியனான மும்பை, சீசனை தோல்வியுடன் தொடங்கினாலும் அடுத்த இரு ஆட்டங்களில் வென்றது. கடைசி ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றதால் மீண்டும் வெற்றிக்கான நெருக்கடியில் இருக்கிறது. மும்பையின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், அந்த அணியின் நடுவரிசை பேட்டிங் ஐசியூவில் இருக்கிறது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா பிரகாசிக்க வேண்டும் நிலையில் இருக்கிறார்கள்.

image


Advertisement

மும்பயைின் பவுலிங் அசத்தலாக இருக்கிறது. பும்ரா, போல்ட், தீபக் சஹார் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தால்தான் இவர்களால் சாதிக்க முடியும். எனினும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் - மும்பை ஆகிய இரு அணிகளும் வெற்றிக்காக போராட வேண்டி இருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close