[X] Close

கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் வழிபாடு!

தமிழ்நாடு

Transgender-worship-at-Shri-Koothandavar-Temple

உளுந்தூர்பேட்டை அருகே உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா கொரோனா நோய்த்தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகள் கோயிலுக்கு நேரில் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு செய்து சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குவாகம் கிராமத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அழைக்கக்கூடிய திருநங்கைகள் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் தேர் திருவிழாவில் கலந்துகொள்வது வழக்கம். இந்த திருவிழாவில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் வருகை தந்து விழாவில் சிறப்பிப்பார்கள்.

image


Advertisement

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் பாரம்பரிய திருவிழாவில் பங்கேற்க முடியாத சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் இன்று குவாகம் கோயிலுக்கு நேரில் சென்று கூத்தாண்டவர் என அழைக்கப்படும் அரவானுக்கு அர்ச்சனை தட்டில் தாலி மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபட்டு சென்றனர். இதனைத்தொடர்ந்து வழக்கமாக பூசாரியிடம் தாலி அணிந்து கொண்டு கோயிலின் இறைவனை நினைத்து பெரிய அளவிலான சூடம் ஏற்றி கும்மியடித்தும், தேங்காய் உடைத்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

image

மேலும் இதுகுறித்து அவர்கள் நம்மிடம் கூறுகையில், எங்களை போன்ற மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் அனைவரும் ஒன்று கூடி தங்களின் சுகத் துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு நெருக்கமான நட்புகளை சந்திக்க முடியாமல் வருத்தகமாக உள்ளது. மேலும் தடைக்காலத்தில் உரிய ஆதார் கார்டு, குடும்ப அட்டை போன்ற ஆதாரங்கள் இன்றி புலம் பெயர்ந்தவர்களாகவும், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் உள்ள தங்களுக்கு ஏதேனும் ஒரு அங்கீகார அடையாள அட்டைகளின் அடிப்படையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close