[X] Close

"போட்டிக்கு முன்பாக ருதுராஜின் மனநிலையை சோதித்தேன்" - சைக்காலஜிஸ்ட் ஆன தோனி

ஐபிஎல் திருவிழா

MS-Dhoni-assessed-Ruturaj-Gaikwad-mindset-ahead-of-KKR-game

கொல்கத்தாவுடனான போட்டிக்கு முன்பாக ருதுராஜ் கெய்க்வாட்டின் மன நிலையை சோதித்தேன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் 18 ரன்களில் கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது சிஎஸ்கே. இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்தார் கேப்டன் தோனி. இதே போட்டியில் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தப் போட்டிக்கு முன்பாக முந்தைய ஆட்டங்களில் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகிய ருதுராஜூக்கு நேற்றையப் போட்டி உத்வேகமாக அமைந்தது.

image


Advertisement

இது குறித்து பேசிய தோனி "ருதுராஜ் ஒரு கிளாஸான வீரர் என்பதை கடந்தாண்டே நிரூபித்தார். எப்போதும் ஒரு வீரரின் மன நிலையை அலசி ஆராய வேண்டும், அதனை புரிந்துக்கொள்ள வேண்டும். போட்டிக்கு முன்பாக ருதுராஜிடம் 'இன்றைய நாளில் நீ எப்படி உணருகிறாய்' என கேட்டேன். அப்போது அவரின் கண்களை பார்த்தேன். அதில் எவ்விதமான பயமும் சலனமும் தெரியவில்லை" என்றார்.

மேலும் "அவரின் ரியாக்ஷன்களை பார்த்த பின்பு எனக்கும் நம்பிக்கை வந்தது. இதைத்தான் நான் என் வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறேன். இது ஒரு சிறிய மனோதத்துவம் அவ்வளவுதான், அது எப்போதும் நன்மையே செய்திருக்கிறது" என்றார் தோனி.


Advertisement

Advertisement
[X] Close