உத்தரபிரதேசம் : மயான கொட்டகை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம் : மயான கொட்டகை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசம் : மயான கொட்டகை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழப்பு
Published on

இறுதி சடங்கில் கலந்துகொண்டு மழைக்காக ஒதுங்கியபோது மயான கொட்டகையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் முராத்நகரில் உள்ள தகன மைதானத்தில் மயான கொட்டகையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். உள்ளூர்வாசியான ராம் தானின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள பெரும்பாலான மக்கள் வந்திருந்தனர்.  அப்போது மழைக்காக ஒரு கட்டடத்திற்குள் ஒதுங்கியபோது 38 பேர் இடிபாடுகளின் கீழ் சிக்கிக்கொண்டனர். இதில் 21 பேர் உயிரிழந்தனர். "மீட்புப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, தேசிய பேரிடர் மீட்புப்படையின் குழுவும் அந்த இடத்தை அடைந்துள்ளது" என்று காஜியாபாத் காவல் கண்காணிப்பாளர் ஈராஜ் ராஜா தெரிவித்தார்.

"முராத்நகரில் ஒரு கொட்டகை இடிந்து விழுந்ததில் இதுவரை  38 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று மீரட் பிரதேச ஆணையர் அனிதா சி மேஷ்ராம் கூறினார்

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ .2 லட்சம் நிதி உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குடியசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தும் இந்த சோகம் குறித்து வருத்தம் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com