
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று 1,449 என்ற அளவில் பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில் இன்று 1,432ஆக குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 181 பேர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நேற்றைய உயிரிழப்பு 16 ஆக இருந்த நிலையில் இன்று 25 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல ஒரு நாளில் 1,519 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.