மக்களவையில் எம்.பி. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி சொன்ன பதில்கள்! #Video
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அதில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாஜக மேல் கடுமையான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு நேற்று தனது வாதத்தின்போது பிரதமர் மோடி பதிலளித்தார். இதில் ராகுல் என்ன சொன்னார், அதற்கு மோடி என்ன எதிர்வினையாற்றினார் என்பதை இங்கே பார்க்கலாம்:
1. “பாரத மாதாவை மணிப்பூரில் கொன்று விட்டீர்கள்; மணிப்பூரை பிளவு படுத்திவிட்டீர்கள்” - ராகுல் காந்தி.
“பாரத மாதா கொலை செய்யப்பட்டதாக ராகுல் பேசியது நாட்டில் ஒவ்வொரு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டது” - பிரதமர் மோடி.
2. “நீங்கள் தேச துரோகிகள், தேசபக்தி அற்றவர்கள்; தேசத்தை கொன்று கொண்டிருக்கிறீர்கள்” - ராகுல் காந்தி.
“காங்கிரசார்தான் பிரிவினைவாதிகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் ஆதரவாக நடந்துகொண்டுள்ளனர்” - பிரதமர் மோடி
3. “மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக கூட பிரதமர் கருதவில்லை”- ராகுல் காந்தி
“மணிப்பூர் எங்கள் இதயத்தின் ஒரு பகுதி. அங்குள்ள தாய்மார்கள், சகோதரிகள், குழந்தைகள் நலனுக்காக இந்த தேசமும் நாடாளுமன்றமும் துணை நிற்கிறது” - பிரதமர்.

4. “நீங்கள் தேசம் முழுவதும் மண்ணெண்ணெய் தெளித்துள்ளீர்கள்; தற்போது மணிப்பூரில் பற்றவைத்துள்ளீர்கள்” ராகுல் காந்தி
“மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் இப்போது சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளும் நேருவும் கையாண்ட தவறான கொள்கைகளே காரணம்” மோடி.