இந்தியா
’கிராமங்களை மறந்துவிடக்கூடாது’ - சங்கல்ப சப்தா திட்டத்தை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு!
2047-ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் முன்னேறி கொண்டிருக்கும்போது கிராமங்களை மறந்துவிடக்கூடாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற உள்ள சங்கல்ப சப்தா திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்து பேசும் போது இதனை தெரிவித்தார். குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வட்டார அளவிலேயே நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது என்றும் நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற இலக்கினை முன்வைத்து பயணித்தால், கடினமான இலக்குகள்கூட எளிமையாக மாறிவிடும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வட்டார வாரியாக சரியான முறையில் ஒருங்கிணைத்துவிட்டால், மிகப்பெரிய விஷயங்களைக்கூட விரைவில் சாத்தியமாக்கிவிடலாம் என்றார். 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் முன்னேறி கொண்டிருக்கும்போது கிராமங்களை மறந்துவிடக்கூடாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.