ராகுல் காந்தியை "குட்டிப்பையன்" என்று அழைத்த காங்கிரஸ் மேலிடத் தலைவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க சென்றபோது கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வினய்பிரதான் என்பவர் ‘வாட்ஸ் அப்’பில் செய்தி ஒன்றை காங்கிரசாரிடம் பரப்பினார். அதில், "ராகுல் காந்திக்கு முதல் அக்கறை நாட்டின் மீதுதான், மற்றவர்களை போல அதானி, அம்பானி, மல்லையா ஆகியோருடன் ராகுல் கை கோர்க்கவில்லை. பப்பு கலக்கி விட்டான்" என்று தெரிவித்திருந்தார். சின்னபையன், குட்டிபையன் என்பதை இந்தியில் செல்லமாக பப்பு என்பார்கள். ராகுல் காந்தியை இவ்வாறு அவர் அழைத்தது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வினய்பிரதானிடம் காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டநிலையில், அவரின் பதிலில் திருப்தி ஏற்படாத தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து கட்சி பதவியிலிருந்தும் நீக்கியுள்ளது.