’சிறப்பு அந்தஸ்தை நீக்கியது வெட்கக்கேடு’: எதிர்க்கட்சிகள் கண்டனம்

’சிறப்பு அந்தஸ்தை நீக்கியது வெட்கக்கேடு’: எதிர்க்கட்சிகள் கண்டனம்
’சிறப்பு அந்தஸ்தை நீக்கியது வெட்கக்கேடு’: எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 307-ஐ நீக்குவது குறித்தும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவை யுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கடும் அமளி ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. 


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com