கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சற்றுநேரத்திற்கு முன்பு டெல்லி துணை நிலை ஆளுநருடன் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு நடத்தினார். அப்போது டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்து வருகிறது. மருத்துவமனையில் கூடுதல் சுமை அதிகரித்து வருவதாக எடுத்துரைத்தார்.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க ஒருவாரம் முழு ஊரடங்கை அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார் இன்றிரவு 10 மணிமுதல் 26 ஆம் தேதி காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.