
கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரி பகுதியில் இன்று காலை கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு என்ஐஏ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், களமச்சேரி குண்டு வெடிப்பிற்கு நான் தான் காரணம் என்று கொடைகரை காவல் நிலையத்தில் வந்து கூறிய நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடந்தி வருகின்றனர்.
அதேபோல் கண்ணூர் ரயில் நிலையத்தில் குஜராத்தை சேர்ந்த ஒருவரிடம் விசாரித்த போது அவர் அளித்த பதிலால் சந்தேகமடைந்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கேரளா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.