
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மழை. 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக உயர்வு. காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை ஹெலிகாப்டரில் சென்று துணிச்சலுடன் மீட்ட வீரர்கள்
அதிகாரிகளே மக்களை தேடிச் சென்று மனுக்களை பெறும் சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. ஒரு மாதத்திற்குள் குறைகள் தீர்த்து வைக்கப்படும் என உறுதி
நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செயல்களால் அமைதிக்கு ஆபத்து என பிரதமர் மோடி கவலை. அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மறைமுகமாக சுட்டிக்காட்டி தொலைபேசியில் பேச்சு
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை. மக்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் பேச்சு
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு